வெள்ளி, 6 மே, 2011

இஸ்லாமும் இசையும்

இஸ்லாமும் இசையும்: இஸ்லாத்தில் இசை அனுமதிக்கப்பட்டுள்ளதா?(அப்பாஸ்-சைதாப் பேட்டை, சென்னை)
பதில்:- 'அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவிடம், 'திருமணம் நடத்துகிறாய். கேளிக்கை ஏதும் இல்லையா? அன்சாரிகளுக்கு கேளிக்கைப் பார்ப்பது மிகவும் விருப்பமானதாச்சே!' என வினவினார்கள்.
அறிவிப்பாளர்: உர்வா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி.
மதம், மார்க்கம் என இருந்தாலே அங்கு திருநாட்களும், பெருநாட்களும் இருக்கும்.
ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் சிலர் வாழ்கின்றனர். அவர்கள் இன்புறும் விதமாக திருநாளோ, பெருநாளோ அதில் இல்லை என்றால் அக் கோட்பாட்டிற்கு மதம் எனப் பெயர் சூட்டப்பட மாட்டாது.
ஒவ்வொரு மதத்தாரும் தத்தமது திருநாட்களைப் புதுப் பொலிவுன் கொண்டாடி மகிழவே ஆசைக் கொள்வர்.

இலஞ்சம் வாங்குவது கூடுமா? கூடாதா?
கேள்வி: இலஞ்சம் வாங்குவது கூடுமா? கூடாதா?
பதில்: இஸ்லாத்தில் இலஞ்சம் வாங்குவது கூடாது. 'நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான (இலஞ்ச) முறையில் உண்ணாதீர்கள். (உங்களது கட்சி பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் செல்வத்தில் எதனையும் பாவமாக விழுங்குவதற்காக (இலஞ்சம் கொடுக்க) அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
அல்-குர்ஆன் 2:188.
இந்த இறைவசனம் இலஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் தடை செய்கிறது.
இலஞ்சம் வாங்கி உண்ணுவோரின் ஒவ்வொரு சதைப்பகுதியும் நரக நெருப்பினால் நிரப்பப்படுகின்றது என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
(அபூதாவூத், அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு)
நன்றி: வெற்றி நவம்பர்; 2001

இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)

!
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)
வஸீலா என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற அர்த்தத்தை கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான்.

பீடி, சிகரெட் புகைக்கலாமா?
கேள்வி: பீடி, சிகரெட் புகைக்கலாமா? மத்ரஸாக்களில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது புகை பிடிக்கலாமா?
பதில்: பீடி, சிகரெட் போன்றவைகளை புகைப்பதால்' மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்றிருந்தால் அது மக்ரூஹ்.(நூல்: அல்ஹதீகத்துன் நதிய்யா ஷரஹ் அத்தரீகத்துல் முஹம்மதிய்யா பாகம் 1 பக்கம் 113)
திருமறை ஓதும் போதும், தப்ஸீர், ஹதீஸ் மற்றும் மார்க்கப் போதனைகளை நடத்தும்போதும் சிகரெட், ஹுகு;கா, வெற்றிலை போன்றவற்றை உபயோகிப்பது நல்லொழுக்கத்தைச் சார்ந்ததல்ல. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள், 'உங்கள் வாய்களை மிஸ்வாக் செய்தவன் மூலம் மணமாக்கி வையுங்கள். ஏனெனில் உங்கள் வாய்கள் திருக்குர்ஆன் வெளிவரும் வழியாக இருக்கிறது.(முஸ்லிம், அபூதாவூத், தப்ரானி, அஹ்மத்) நூல்: பதாவா ஆப்ரிக்கா பக்கம் 38.
இது குறித்து மேலும் அல்லாமா அப்துல் ஹை லக்னவீ அவர்கள் 'தாவீஹுல் ஜினான்பிதஷ்ரீஹி ஹுகமி ஷுர்பித் துகான்' என்ற நூலில் தெளிவான விபரங்'களைத் தந்துள்ளார்கள்
.
நன்றி: வஸீலா
பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?
கேள்வி: பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா? ஆதாரம் தேவை
பதில்:சிறப்புடையோர்களையும் பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன. (ஆதாரம்: பதாவா நவவி பக்கம் 48,49)
ஞானம் உள்ளோர், நற்குணமுடையோர், நீதமாக நடக்கும் அதிகாரி, பெற்றோர் ஆகியோருக்கு மரியாதைக்காக எழுந்து நிற்பது சுன்னத் (ஆதாரம் பத்ஹுல் முயீனு; பாகம் 4, பக்கம் 192)
சிறப்புடையோரை கண்ணியப்படுத்தும் நோக்குடன் எழுந்து நிற்பது சுன்னத்.பத்ஹுல் பாரி பாகம் 13 பக்கம் 288,293 தன்வீருல் குலூப் பக்கம் 200.
மரியாதைக்காக எழுந்து நிற்பது கூடாது என்று எந்தவொரு ஹதீதும் வரவில்லை.

நன்றி: வஸீலா 1-7-87